Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதிக்குமா இந்தியா!  தென்னாப்பிரிக்க தொடர் இன்று ஆரம்பம்

In கிாிக்கட்
Updated: 04:42 GMT, Jan 5, 2018 | Published: 04:42 GMT, Jan 5, 2018 |
0 Comments
1306
This post was written by : Sujitharan

சுற்றுலா இந்திய அணிக்கும், தென்னாப்பிரிக்க அணிக்குமிடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

டெஸ்ட், ஒருநாள், ரி-20 என நீண்ட நாள் சுற்றுலாச் சென்றுள்ள, விராட் கோலி தலைமையிலான இந்திய முதலாவதாக, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இதன் முதல் போட்டி இன்று, கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.  இந்த தொடர் மூலம், இந்தியாவிலும் ஆசிய நாடுகளிலும் தொடர்ச்சியாக பல வெற்றிகளைப் பெற்று சாதனை அணியாக வலம் வரும், இந்திய அணி, தென்னாப்பிரிக்க மண்ணில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் 6 டெஸ்ட் தொடரில் பங்குற்ற இந்திய அணி, ஒருமுறையேனும் தொடரைக் கைப்பற்றியது இல்லை. எனினும் அசுர வளர்ச்சி கண்டுள்ள இந்திய அணி, இந்த முறை தென்னாப்பிரிக்காவில் சாதிக்கும் என்றும், பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து, 6 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும், 3 ரி-20 போட்டிகளிலும் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg