Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: பீதியில் மக்கள்

In
Updated: 04:47 GMT, Jan 5, 2018 | Published: 04:47 GMT, Jan 5, 2018 |
0 Comments
1302
This post was written by : Varshini

வடகிழக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் 4 தசம் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

கடும் குளிருடனான காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிக்காகோ உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. குறிப்பாக, சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அதிக பனி மூட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வீதிகளில் நிரம்பியுள்ள பனிக் கட்டிகளை அகற்றும் பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலைமை உக்கிரமடைந்தால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடுமென அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் வட கரோலினா உள்ளிட்ட கடற்பகுதிகளை அண்டிய கிராமங்களுக்கு பனிப்புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடகிழக்கு அமெரிக்காவில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பனிப்புயல் வீசி வருவதாக மாநில வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் 4 தசம் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடற்கரை நகரமான பெர்க்லியில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பாரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg