Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் அரசியல் பிரவேசம் கலைத்துறையை மேம்படுத்த வேண்டும்: ஏ.ஆர்.ரகுமான்

In சினிமா
Published: 04:58 GMT, Jan 5, 2018 |
0 Comments
1109
icon_com
This post was written by : Ravivarman
ARRahman

ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியான விடயம் என்பதுடன், அவர்களது அரசியல் பிரவேசம் கலைத்துறையை மேம்படுத்த வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார்.

‘நேற்று இன்று நாளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி 12ம் திகதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து அவர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ‘நான் அயல்நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது, சென்னையில் எப்போது இது போன்று இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் ஏற்படும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்துள்ளது.

மேலும் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பற்றி கூறும்போது, ‘ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி. அவர்களுக்குள் ஏதோ ஆதங்கம் இருக்கிறது.

அதனால் தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ரஜினிகாந்த் அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள், இசை, கலைகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்க்கை இன்னும் மேம்பட வேண்டும். அதிசயம் நிகழ வேண்டும் என்று நான் உணர்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)