Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சர் நேரில் வந்து பேச வேண்டும்: ஊழியர்கள் வலியுறுத்தல்!

In இந்தியா
Updated: 07:24 GMT, Jan 5, 2018 | Published: 07:24 GMT, Jan 5, 2018 |
0 Comments
1149
This post was written by : Kemasiya

முதலமைச்சர் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்தும்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

சென்னையில் இடம்பெறும் இப் போராட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், தமது ஊதியக்குறைவினை முதலமைச்சர் ஒப்புக் கொள்ளத் தயாரா? அவர் எம்முடன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

“பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டமைக்கு, அமைச்சரும் அவருடைய அனுகுமுறையும், அவர்களின் அநீதியான நடவடிக்கைகளும் தான் காரணம்.

அரசு தமக்கு கீழ் உள்ளவர்களை சமமாக நடத்துவதற்கு முன்வர வேண்டும். பொதுமக்களும் ஊழியர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.” என ஊழியர்கள் சங்கத்தின் போராட்டத் தலைர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினை குறித்த முதலமைச்சர் தனது அலுவலகத்தில் அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் தமது சம்பள உயர்வினை வலியுறுத்தி, கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg