Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தகக் கவிஞரின் வித்தியாசமான திரில்லர் திரைப்படம்!

In சினிமா
Updated: 05:39 GMT, Jan 5, 2018 | Published: 05:34 GMT, Jan 5, 2018 |
0 Comments
1186
This post was written by : Ravivarman

ஸ்ட்ரோபெர்ரி படத்தைத் தொடர்ந்து வித்தியாசமான திரில்லர் படத்தில் கவிஞர் பா.விஜய் நடித்து ள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் பாரிய பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் ‘ஆருத்ரா’.

இதில் நடிகர் பா.விஜய், கே.பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மங்கை தக்ஷிதா, கொல்கத்தாவைச் சேர்ந்த மேகாலீ, ஹைதராபாத்தைச் சேர்ந்த சோனி ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் நடிகர் விக்னேஷ், வை.ஜி.மகேந்திரன், மயில்சாமி, அபிசேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் ‘வித்தக கவிஞர்’ பா விஜய் படம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

”ஸ்ட்ரோபெர்ரியைத் தொடர்ந்து என்னுடைய இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது திரில்லரான படமாக ‘ஆருத்ரா’ உருவாகியிருக்கிறது. ஸ்ட்ரோபெர்ரியில் எப்படி ஒரு சமூக கருத்தை அழுத்தமாக பதிவு செய்தேனோ அதே போல் இந்த ஆருத்ராவிலும் சமூகக்கருத்து ஒன்றை அக்கறையுடன் மையப்படுத்தியிருக்கிறேன்.

இப்படத்தை அனைத்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுடன் அவசியம் பார்க்கவேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இதில் பொறுப்புணர்வுடன் பேசப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இப்படத்தின் டீஸரை வரும் புத்தாண்டு அன்று டுபாயில் வெளியிடுகிறோம்.

இப்படத்தை பொங்கலுக்கு பின்னர் வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg