Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணை முறி மோசடிக்கு ஐ.தே.க.வே முழுப்பொறுப்பு: ஜே.வி.பி.

In இலங்கை
Updated: 05:47 GMT, Jan 5, 2018 | Published: 05:47 GMT, Jan 5, 2018 |
0 Comments
1360
This post was written by : Varshini

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் முழு ஐக்கிய தேசியக் கட்சியும் ஈடுபட்டுள்ளமை வெளிக்கொணரப்பட்டுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினரான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், சம்பந்தப்பட்டோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நோர்வூட் பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

கடந்த 65 ஆண்டு கால அரசியலில் ஐக்கிய தேசிய கட்சியினரும் ராஜபக்ஷாக்களும் பொது சொத்துக்களை சூறையாடி வந்துள்ளனரென குற்றஞ்சாட்டியுள்ள சந்திரசேகரன், மத்திய வங்கியின் அறிக்கையின் படி பதினோராயிரத்து 145 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொதுமக்களின் சொத்துகள் மோசடி செய்யப்பட்டுள்ளதென சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

இதேவேளை, ராஜபக்ஷாக்களின் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து தண்டனை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg