Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா இணக்கம்

In உலகம்
Published: 05:49 GMT, Jan 5, 2018 |
0 Comments
1141
icon_com
This post was written by : Elakkiya
_99473057_gettyimages-826889642

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு வடகொரியா இணங்கியுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பெப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரிய வீரர்கள் பங்கேற்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பன்முன்ஜோனில் இந்த கலந்துரையாடல் நடைபெறம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருதரப்பினரும் வரலாற்று ரீதியாக பேச்சுவார்த்தை நடத்திய அமைதியான இடமாக அமைந்துள்ள இந்த கிராமம் இராணுவமயமாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமைந்துள்ளது.

இப்போட்டிகளுக்கு வடகொரியா சார்பாக பிரதிநதிகள் அணியை அனுப்புவது மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பதற்றமான உறவை மேமம்படுத்த உதவும் வாய்ப்பாக இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)