Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கான் தலைநகரில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்

In உலகம்
Updated: 06:08 GMT, Jan 5, 2018 | Published: 06:08 GMT, Jan 5, 2018 |
0 Comments
1486
This post was written by : Elakkiya

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் டசின் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மது பாவனைகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்தாரி இராணுவ சீருடை அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது.

தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்த நிலையில் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg