Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகளை குறைக்கும் அமெரிக்கா

In உலகம்
Updated: 06:53 GMT, Jan 5, 2018 | Published: 06:53 GMT, Jan 5, 2018 |
0 Comments
1298
This post was written by : Elakkiya

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான பாதுகாப்பு உதவிகளையும் குறைந்துவரும் அமெரிக்கா, பாகிஸ்தானில் இயங்கும் பங்கரவாத குழுக்களை சரியாக கையாள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தவறியமையே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கான் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் ஹக்ஹானி குழுக்களுக்கு எதிராக இஸ்லாமபாத் நடவடிக்கை எடுக்கும் வரை இந்த தடை தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை ஆப்கானிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ள போதிலும் சீனா பாகிஸ்தானுக்கே தொடர்ந்து ஆதரவளிக்கின்றது. பாகிஸ்தானில் பல மில்லியன்களை முதலீடு செய்வதன் மூலம் இஸ்லாமபாத்தை சீனா பாதுகாத்து வருகின்றது.

அமெரிக்கா 255 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்குவதில் ஏற்கனவே காலம்தாழ்த்தி வந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹீத்தர் நவேர்ட், அமெரிக்கா இதுவரை எவ்வளவு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை, டொலர்கள் மதிப்பில் கூற முடியவில்லை என்றும் ஆஃப்கான் தாலிபான்களும், ஹக்குவனி குழுக்களும் அமெரிக்க அதிகாரிகளை குறிவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்கான பண உதவிகளை பெற்றுக் கொண்ட போதிலும் பாகிஸ்தான் தம்மிடம் பொய்கூறி வருவதாக இவ்வார ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

ட்ரம்பின் இக்கருத்துக்கு பதிலளித்த பாகிஸ்தான் அரசு பல தசாப்தங்களாக பகிஸ்தான் செய்துவந்த தியாகத்தை அமெரிக்கா மறந்துவிட்டதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg