Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய அணிகளுக்கு அடங்காத கேப்டவுன் மைதானத்தை இந்தியா அடக்கி ஆளுமா?

In கிாிக்கட்
Updated: 06:45 GMT, Jan 5, 2018 | Published: 06:43 GMT, Jan 5, 2018 |
0 Comments
1455
icon_com
This post was written by : Sujitharan
eac8e326ffffd6e50194a49b86a603b9

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள கேப்டவுன் மைதானத்தில், வெற்றி பெற்று ஆசியாவிற்கு இந்தியா பெருமைச் சேர்க்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்தவொரு ஆசிய அணியும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்காத நிலையில், இந்தியா அந்த சோகத்தைப் போக்குமா என்று இந்திய இரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்கா சவால் கொடுக்கிறதோ, இல்லையோ ஆசிய அணிகளுக்கு அடங்கிப்போகாத, கேப்டவுன் மைதானம் எப்பொழுதும், ஆசிய அணிகளுக்கு சவால் மிக்க ஒரு மைதானமாகவே காணப்படுகிறது.

கேப்டவுன் மைதானத்தில் இதுவரை எந்தவொரு ஆசிய அணியும் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. இந்த மைதானத்தில் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இரண்டு போட்டிகளில் தோல்வியடைய, இரு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இந்தியாவைத் தவிர,  ஏனைய ஆசிய அணிகளான இலங்கை இங்கு விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும், பாகிஸ்தான் 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்விகளையேச் சந்தித்திருக்கிறமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)