Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கன்னட ஜோதிடர் ஆரூடம்!

In இந்தியா
Updated: 09:45 GMT, Jan 5, 2018 | Published: 06:59 GMT, Jan 5, 2018 |
0 Comments
1688
This post was written by : Ravivarman

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து  கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,”ரஜினிகாந்த் மகர ராசிக்காரர். சிம்ம லக்னம் பொருந்தியவர். அவருக்கு துர்தரா யோகம் உள்ளது அதன்படி அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது.

ஆனால் அருகில் இருப்பவர்கள் மூலம் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரது   ராசிப்படி வருகிற எம்.பி. தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அவரது ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது. எனவே எந்த உயரத்திற்கு சென்றாலும் அந்த தோஷம் ஒருவரை கீழே இழுத்துக் கொண்டு வந்துவிடும்.  எனவே ரஜினிகாந்த் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கக்கூடாது. கட்சித் தலைவராக மட்டுமே இருப்பது நல்லது. அவர் கூறும் நபரையே முதலமைச்சர் ஆக்க வேண்டும்.

ரஜினிகாந்தின் அரசியல்கட்சி தமிழகத்தில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் அரசியலில் அவருக்கு எதிர்ப்புகள் வரும் அதை சமாளித்து வெற்றி பெறுவார். காங்கிரசும், பா.ஜனதாவும் இழுபறியாக வந்தாலும் கடைசியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும்” என ஜோதிடர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg