Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18ஆம் ஆண்டு நினைவுநாள்

In இலங்கை
Updated: 06:52 GMT, Jan 5, 2018 | Published: 06:52 GMT, Jan 5, 2018 |
0 Comments
1570
This post was written by : Varshini

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18ஆவது ஆண்டு நினைவுதினம், இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். கந்தர்மடம் மணல்தறை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது, குமார் பொன்னம்பலத்தின் மகனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குமார் பொன்னம்பலத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். யாழ். மாநகரசபை வேட்பாளரான மணிவண்ணன், பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.

அத்தோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத கருத்துக்களுக்கு சவால் விடும் வகையில் தலைநகரில் தனித்து நின்று துணிந்து போராடிய மாமனிதர் சட்டத்தரணி குமார் பொன்னம்பலம், கடந்த 2000ஆம் ஆண்டு இதே நாளில் தலைநகர் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிறந்த சட்டவாதியான அவர், இனவாத செயற்பாடுகளால் சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடியதோடு, பேரினவாதத்தை எதிர்த்து துணிச்சலுடன் செயற்பட்டவராவார். அவரது துணிச்சல் பேரினவாதத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த நிலையில், துப்பாக்கிச் சன்னங்களால் அவர் மௌனிக்கப்பட்டார். இவ்வாறான கொலைகளுக்கு நீதிகோரிய போராட்டம் தசாப்தங்கள் கடந்து இன்றும் நீடிக்கின்றமை தமிழ் சமூகத்தின் சாபக்கேடாகவே அமைந்துள்ளது.

kumar ponnambalam memorial (2) kumar ponnambalam memorial (3) kumar ponnambalam memorial (4) kumar ponnambalam memorial (5) kumar ponnambalam memorial (8) kumar ponnambalam memorial (7) kumar ponnambalam memorial (6)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg