Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய வீரரை துரத்தும் காயம்! ஆஸி ஓபனிலிருந்தும் வெளியேறினார் முர்ரே

In டெனிஸ்
Updated: 07:34 GMT, Jan 5, 2018 | Published: 07:34 GMT, Jan 5, 2018 |
0 Comments
1177
This post was written by : Sujitharan

பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் எண்டி முர்ரே, வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டெனிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின்போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எண்டி முர்ரே, 6 மாதகாலம் டென்னிஸ் போட்டிகள் எதிலும் பங்கேற்றமால் சிகிச்சைப் பெற்று வந்தார்.

பின், காயம் குணமடைந்த அவர், கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில் பங்கேற்றார். எனினும், அவருக்கு மீண்டும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதன்காரணமாக பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்காதிருந்த அவர், தற்போது, அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

30 வயதான முர்ரே கடந்த ஆண்டு உலகின் முதல் நிலை வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். எனினும், காயம் காரணமாக டென்னிஸ் தொடர்களில் பங்கேற்காத நிலையில், அவர் உலகத்தரவரிசையில் 16 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg