Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் சட்டங்களை மீறினால் இரண்டு வருட சிறைத்தண்டனை: மஹிந்த தேசப்பிரிய

In இலங்கை
Published: 07:59 GMT, Jan 5, 2018 |
0 Comments
1208
This post was written by : Varshini

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் ஊடகங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருக்கு 2 வருட சிறைத்தண்டனையும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் தமது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பில் பெண் வேட்பாளர் ஒருவரின் வேட்புமனு தடுக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg