Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டத்தை முன்னெடுப்போம் – புகழேந்தி

In இந்தியா
Published: 08:34 GMT, Jan 5, 2018 |
0 Comments
1075
This post was written by : Kemasiya
cvbcv

ஆர்.கே.நகர் மக்களை இழிவாக பேசியதற்காக நடிகர் கமல்ஹாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த புகழேந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்திருந்த அவர்,

“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் இன்னும் தான் இறங்கவில்லை என்ற எரிச்சலில் கமல்ஹாசன் ஏதேதோ பேசுகிறார்.

இவர் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் ஐந்து சதவீதம் கூட தேர்ச்சி பெறாது. ஆர்.கே.நகர் தொகுதி மக்களை திருடர்கள், பிச்சைக்காரர்கள் என பகிரங்கமாக கூறிய கமல்ஹாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிடின், நாம் போராட்டத்தை முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg