Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் ஆயரை சந்தித்த மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்

In இலங்கை
Updated: 11:43 GMT, Jan 5, 2018 | Published: 08:48 GMT, Jan 5, 2018 |
0 Comments
1188
This post was written by : Arul Jesu

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்திரு கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,    ஓய்வு நிலைய ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை முன்னெடுத்துச் சென்ற தமிழ் தேசிய பணிகளை போன்ற பணியை புதிய ஆயரிடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் அடக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் புதிய ஆயருக்கு எடுத்துரைத்தாகவும் அவர் கூறினார்.

DSC_0038

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg