Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்ரமின் புதிய படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

In சினிமா
Published: 09:00 GMT, Jan 5, 2018 |
0 Comments
1093
This post was written by : Ravivarman
201801041256467309_Vikrams-Saamy-Square-Release-announcement_SECVPF

ஹரி இயக்கத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘சாமி ஸ்கொயர்” படத்தில் விக்ரம் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார்.

இப்படத்தில் இருந்து திரிஷா விலகியதால் அவருக்குப் பதிலாக சதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதேவேளை விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)