Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடுதிரும்பாத ஜாலிய ஜயவிக்ரமசூரியவிற்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

In இலங்கை
Updated: 09:45 GMT, Jan 5, 2018 | Published: 09:45 GMT, Jan 5, 2018 |
0 Comments
1201
This post was written by : Sujitharan

அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய ஜயவிக்ரமசூரியவை கைது செய்யுமாறு இன்று (வெள்ளிக்கிழமை) திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்ன, இந்த பிடியாணை உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

ஜாலிய ஜயவிக்ரமசூரிய, அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதுவராக பதவி வகித்த காலத்தில், மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டிற்கு அமைய, கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், நீதிமன்ற அனுமதியைப் பெற்ற வெளிநாட்டிற்கு சென்றார்.

எனினும், வெளிநாடு சென்ற அவர் இலங்கைக்கு மீண்டும் திரும்பாதமையினால், அவரைக் கைது செய்ய நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg