Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேட்பாளர் கடத்தல் தொடர்பான செய்தி ஆதாரமற்றது – சிவமோகன்

In இலங்கை
Updated: 11:03 GMT, Jan 5, 2018 | Published: 10:01 GMT, Jan 5, 2018 |
0 Comments
1203
This post was written by : Arul Jesu

முல்லைத்தீவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டமை புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இருந்த நூறு வீத வெற்றிக்கு சேறுபூசும் நடவடிக்கை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தன்னிலை விளக்கத்தினை அளிப்பதற்காக இன்று சிவமோகன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை வவுனியாவில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், இவ்வாறான பொய்யான தகவலை ஊடகங்கள் ஊதி பெருப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை ஒரு பிரச்சினையாக முன்னிலைப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு வரை கொண்டு சென்றமையே இந்த ஊடக சந்திப்பிற்னாக அவசியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

கூட்டமைப்பின் ஒற்றுமைக்காவே இதுவரை காலமும் தான் இது தொடர்பான மேலதிக விடயங்களை வெளிப்படுத்தாமல் இருந்தாக கூறிய அவர், தற்போது உண்மைகளை கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்திய இராணுவத்தை தவிர எவரும் விடுதலைப்புலிகளின் கோட்டையாக கருதப்பட்ட புதுகுடியிருப்பு பகுதிக்கு சென்றதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg