Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எழிலன் எங்கே? ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

In இலங்கை
Published: 10:21 GMT, Jan 5, 2018 |
0 Comments
1297
This post was written by : Sujitharan
elilan-400-seithy

இறுதிக் கட்டப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர், எழிலன் உள்ளிட்ட 12 போராளிகளை, முன்னிலையாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட, ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு உக்கிரமாக நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, எழிலன் உள்ளிட்ட பல போராளிகள், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

எனினும் சரணடைந்தவர்கள் குறித்து இதுவரையில் எதுவித தகவல்களும் இல்லாத நிலையில், அவர்களின் நிலையறிய, உறவினர்கள் கடும் பிரயத்தனங்களைச் செய்தனர்.

எதிலும் பலன் கிடைக்காத நிலையில், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியவும், அவர்களை வெளிக்கொண்டு வருவதற்குமாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, குறித்த வழக்கு எதிர்வரும் பங்குனி மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg