Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலைசெய்வதே பிரச்சினைக்கு தீர்வு என்றால் அதை செய்திருப்போமே – டக்லஸ்

In இலங்கை
Updated: 10:53 GMT, Jan 5, 2018 | Published: 10:53 GMT, Jan 5, 2018 |
0 Comments
1324
This post was written by : Arul Jesu

ஈ.பி.டி.பி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையுடன் தொடர்ந்து பயணித்து வரும் நிலையில் சில தமிழ் கட்சிகள் தம்மை வசைபாடி வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்ப்ல் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி முக்கிஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமது கட்சி இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்த்து தம்மை துரோகி என கூறியதாகவும், ஆனால் தற்போது அவர்களும் அதே இடத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

எனினும் தமது கட்சி கொள்கைமீது உறுதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருந்து வருகின்றது எனவும் அவர் கூறினார்.

வடகிழக்கு பிரிக்கமுடியாத தனியலகு என்பதை வெளிப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இந்தமுறை அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் ஏழு சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிடுவதாக அவர் கூறினார்.

தமது கொள்கை நடைமுறைசாத்தியமானது எனவும், 13 ஆவது திருத்த சட்டத்தினை பலப்படுத்தி முன்கொண்டுசெல்வதன் மூலமே ஒரு நிலையான தீர்வினைப்பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

ஈ.பி.டி.பி.யின் கொள்கை கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும் அல்ல.கொள்ளையடிப்பதும்,கொலைசெய்வதும் ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்றால் எப்போதே பிரச்சினைகளை தீர்த்திருக்கமுடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

DSC08203

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg