Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் கெய்ரோவுக்கான விமான சேவையை ஆரம்பிக்கிறது ரஷ்யா!

In ஐரோப்பா
Updated: 11:16 GMT, Jan 5, 2018 | Published: 11:16 GMT, Jan 5, 2018 |
0 Comments
1173
This post was written by : Elakkiya

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த எகிப்திய தலைநகர் கெய்ரோவுக்கான ரஷ்ய விமான சேவையை மீள ஆரம்பிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அனுமதி வழங்கியுள்ளார். விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரத்துடனான ஆவணத்தை ரஷ்ய அரசாங்கம் நேற்று (வியாழக்கிழமை) தமது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்ய விமானத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து எகிப்துக்கான விமான போக்குவரத்தை ரஷ்யா தடை செய்தது. இந்த சம்பவத்தில் 224 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறிருக்க 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய மற்றும் எகிப்து தலைவர்களுக்கு இடையில் வழக்கமான விமான சேவையை மீள ஆரம்பிப்பதற்கு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் மக்சிம் சொகோலோவ் மற்றும் எகிப்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஷெரிஃப் ஃபெதி ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இவ் உடன்படிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஒப்புதலுக்காக நிலுவையிலிருந்த நிலையில் ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி எகிப்திய விமான நிலையங்களின் தகவல்களின் பிரகாரம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் கெய்ரோ மற்றும் மொஸ்கோவுக்கு இடையில் விமான சேவைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg