Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எக்ஸ் மேன் திரைப்பட நடிகைக்கு திடீர் திருமணம்

In கனடா
Updated: 11:33 GMT, Jan 5, 2018 | Published: 11:33 GMT, Jan 5, 2018 |
0 Comments
1089
This post was written by : Anojkiyan

கனடாவின் பிரபல நடிகையான எலன் பேஜ், தனது காதலியான எம்மா போர்ட்னரை திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

30 வயதான எலன் பேஜ், 23 வயது நடனக் கலைஞரான எம்மா போர்ட்னரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்று (வியாழக்கிழமை) திருமணம் செய்து கொண்டு இதனை முன்னணி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, “எம்மா போர்ட்னர் போன்ற ஒரு அழகான பெண், என் வாழ்க்கைத் துணையாக கிடைத்ததை நம்ப கூட முடியவில்லை” என இன்ஸ்டாகிராமில் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்கள் பலரும் இருவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதற்கு முன்னார் எம்மா போர்ட்னர், சமந்தா தாமஸ் என்னும் நடிகையை 18 மாதங்கள் காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg