Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச தலைவர் மைத்திரியைச் சந்தித்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

In இலங்கை
Updated: 11:13 GMT, Jan 5, 2018 | Published: 11:13 GMT, Jan 5, 2018 |
0 Comments
1268
This post was written by : Sujitharan

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ, (Taro Kono) இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இலங்கையில் காணப்படும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து, விரிவாக ஆராய சிறப்பு குழுவொன்று இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளதாகவும், ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, அபிவிருத்தியை மேற்கொண்டவாறே, நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்கும் இலங்கைக்கு, முழு ஆதரவை வழங்குவோம் என்றும், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg