Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட- தென்கொரிய பேச்சுவார்த்தை- ரஷ்யா வரவேற்பு

In உலகம்
Updated: 17:20 GMT, Jan 5, 2018 | Published: 11:42 GMT, Jan 5, 2018 |
0 Comments
1267
This post was written by : Elakkiya

மீள பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு வடகொரியா மற்றும் தென்கொரியா இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் ரஷ்யா வரவேற்றுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சை மேற்கோளிட்டு ரஷ்ய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரிய தீபகற்ப பிரச்சினைக்கு உறுதியான உடன்பாட்டை பெறும் நோக்கில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என மொஸ்கோ நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் தீபகற்ப நிலைமையை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின்னர் வடக்கு மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg