Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தலாக் புதிய சட்டமூலத்தை நிறைவேற்றக் கூடாது: முஸ்லிம் ஆண்கள் ஆர்ப்பாட்டம்!

In இந்தியா
Published: 12:05 GMT, Jan 5, 2018 |
0 Comments
1105
This post was written by : Kemasiya
gighihgij

முத்தலாக் குறித்த புதிய சட்டமூலத்தை நிறைவேற்றக்கூடாது எனக்கூறி முஸ்லிம் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) முஸ்லிம் தலைவர்களின் தலைமையில் 2மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றால், அது அம் மக்களின் அனுமதியுடனே கொண்டுவரப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் இத்தகையை செயல் இறையாண்மைக்கு எதிரானது என்றும் ஆர்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியிருந்தனர்.

அத்துடன் இந்தச்சட்டத்தை நிறைவேற்ற எதிர்கட்சிகள் உடப்பட எவரும் ஆதரவு வழங்கக்கூடாது என்றும், இது முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவுக்கும் செயல் எனவும் கூறி, இந்த ஆர்ப்பாட்டக்கார்கள் பதாதைகளை ஏந்தியவாறு போராடியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் பெரும்பாளும் முஸ்லிம் ஆண்களே பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg