Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யானை சின்னத்தில் களமிறங்குவது தேர்தல் வியூகம் என்கிறார் அமைச்சர் ஹக்கீம்

In இலங்கை
Updated: 12:06 GMT, Jan 5, 2018 | Published: 12:01 GMT, Jan 5, 2018 |
0 Comments
1197
This post was written by : Sujitharan

யானை சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றி பெறவேண்டும் என்ற தேவை தங்களுக்கு கிடையாது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். தங்கள் கோட்டையில் யானை சின்னத்தில் கேட்பது, தேர்தல் வியூகம் என்றும் கூறினார்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை இறக்காமம் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களை திறந்து வைத்ததன் பின்னர், நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

‘முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதுபோல சிலர் மாயக்கல்லி மலைக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் முடிச்சுப்போட்டு பேசித்திரிகின்றனர்.

எங்களது கோட்டையில் யானையில் கேட்பது என்பது ஒரு தேர்தல் வியூகம். உள்ளூராட்சி சபைகளுக்கு அனுகூலங்களை அடைந்துகொள்வதற்கான ஒரு முயற்சியே தவிர இதில் வேறொன்றுமில்லை. சின்னங்கள் வேறுபட்டாலும் எண்ணங்கள் மாறுபடவில்லை.

யானையில் போட்டியிட்டுத்தான் வெல்லவேண்டுமென்ற தேவை எங்களுக்கு கிடையாது. ஆனால், யானையில் கேட்பதன்மூலம் பின்னர் ஏற்படுகின்ற விபரீதங்களுக்கு நாங்கள் யானையையும் சேர்ந்து கட்டிப்போடலாம்.

சில மதம்பிடித்த யானைகளும் இருக்கின்றன. அவை ஊருக்குள் புகுந்துவிடக்கூடாது. அதற்காகத்தான், முழு யானைக் கூட்டத்தையும் எங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

எங்களுக்கு எதிராக கிளம்பிய எல்லா விடயங்களும் இப்போது அப்படியே தலைகீழாக மாறியுள்ளன. அக்கரைப்பற்றில் இப்போது அமோகமான ஆதரவுத்தளம் உருவாகியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையையும், பிரதேச சபையையும் கைப்பற்றுகின்ற சூழல் இப்போது நிலவுகிறது.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போதே பல சபைகளை வென்றிருந்தோம். இப்போது ஆளும் கட்சியில் இருக்கும்போது அவை தோற்பதாக யாரும் நினைக்குவிட முடியாது.

நாங்கள் ஏராளமான நிதிகளை அபிவிருத்திகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த வருடம் அதைவிட இரண்டு மடங்கு நிதியொதுக்கீடு செய்வதற்கு நாங்கள் தயாரக இருக்கிறோம்’ என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg