Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்துல் ரஸாக் முஸ்லிம் காங்கிரஸ் பதவிகளிலிருந்து இடைநிறுத்தம்

In இலங்கை
Updated: 12:35 GMT, Jan 5, 2018 | Published: 12:33 GMT, Jan 5, 2018 |
0 Comments
1154
This post was written by : Sujitharan

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரஸாக் (ஜவாத்), கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் இது குறித்து, அப்துல் ரஸாக்கிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால், அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும், உச்சபீட உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜனவரி 03 ஆம் திகதியிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளாதகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரை இடைநிறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவருக்கு செயலாளர் அனுப்பிய கடிதத்தில், கல்முனை மாநகரசபையில் ஐ.தே.க. சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வெளிப்படையாகவும், தீவிரமாகவும் பிரசாரத்தில் ஈடுபடுவதால் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின் உச்சபீடம் அவருக்கெதிராக மேற்கொள்ளவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து உரிய காலத்தில் அவருட தொடர்புகொள்ளும் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg