Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின் தடையை எதிர்கொள்ளவுள்ள நோவா ஸ்கொட்ஷியா மக்கள்!

In கனடா
Published: 12:50 GMT, Jan 5, 2018 |
0 Comments
1053
This post was written by : Anojkiyan
and

அட்லான்டிக் கனடாவை தாக்கவுள்ள பனிப்புயலால் மின் தடை இந்த வார இறுதி வரை நீடிக்கக்கூடும் என நோவா ஸ்கொட்ஷியா மின்சார சபை தெரிவித்துள்ளது.

சிலவேளைகளில் மின் தடை அடுத்த வாரம் வரையிலும் தொடர்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

பனியுடன் கூடிய காற்று மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் தொடக்கம் 140 கிலோமீட்டர் வரை வீசக்கூடிய புயல் காற்றினால் பலத்த பாதிப்புகள் ஏற்படுமென கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால், குறைந்தது 72 மணி நேரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்குமாறும், குறிப்பாக அவசர உதவிப் பொருட்கள், உணவு, நீர், மின்கலம், மின்கலத்தில் இயங்கும் வானொலி, முதலுதவிப் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுகள், உடல்நலக்குறைவை எதிர்நோக்குவோருக்கான மருந்துப் பொருட்கள் என்பற்றை தயார்படுத்திக் கொள்ளுமாறும் நியூ பிரவுன்ஸ்விக் மக்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg