Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதியில் இருந்து தங்க ஆபரணங்களை கொண்டுவர முயற்சித்த ஒருவர் கைது!

In இலங்கை
Published: 13:58 GMT, Jan 5, 2018 |
0 Comments
1055
This post was written by : Anojkiyan
001

சவுதி அரேபியாவில் இருந்து தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே இன்று (வெள்ளிக்கிழமை) காலை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

814.16 கிராம் தங்க ஆபரணங்களை 6 பயணப்பொதிகளில்; மறைத்து வைத்துக் கொண்டு வர முற்பட்ட போதே அவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார். மேலும், தங்க ஆபரணங்களின் மொத்த பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும், தங்க ஆபரணங்கள் அரச உடமையாக்கப்பட்டதாகவும் சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயர்வர்தன மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg