Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரவி கருணாநாயக்கவை பலிக்கடாவாக்க பிரதமர் முயற்சி: விமல் குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 17:29 GMT, Jan 5, 2018 | Published: 16:15 GMT, Jan 5, 2018 |
0 Comments
1153
This post was written by : Anojkiyan
wimal-weerawansa-1

பிணை முறி மோசடி விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை பலிக்கடாவாக மாற்றி, தப்பித்துக் கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்வதாக ஒன்றிணைந்த எதிரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

”இலங்கையின் நிதி முகாமைத்துவம் தொடர்பான பிரதான நிறுவனம் என்ற வகையில் மத்தியவங்கியின் முறி மோசடி குறித்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கட்சித்தலைவர்களால் கலந்துரையாடப்பட்டு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

முறி மோசடி விவகாரத்தில் பிரதமரே பிரதான பங்கை வகிக்கிறார். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை அதற்கான பலிக்கடாவாக மாற்றி, தப்பிக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறன்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாமாக பதவி விலக வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg