Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான மாணவர்கள் பிணையில் விடுதலை!

In இலங்கை
Published: 17:00 GMT, Jan 5, 2018 |
0 Comments
1056
This post was written by : Anojkiyan
bullshit-public-relations-in-court-of-law-dismissed1

தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தில் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான 53 மாணவர்களையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவினையும் மீறி போராட்டமை நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது நீதிமன்றக் கட்டளையினை அவமதித்தமை தொடர்பில், மாணவர்களை கடுமையாக எச்சரித்த நீதவான், பல்கலைக்கழகத்தில் பிரச்சினைகள் ஏதாவது இருப்பின் நிர்வாகத்தினருடன் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதேவேளை, சம்பந்தப்பட்ட 53 மாணவர்களும், மாதத்தில் குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்திட வேண்டுமெனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் விதித்துள்ள தலா 02 வருட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தினுள் புகுந்து கடந்த 28ஆம் திகதி முதல், அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் மறியல் போராட்டங்களை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)