Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா. தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: இலங்கை- ஜப்பான் வலியுறுத்து

In இலங்கை
Published: 03:34 GMT, Jan 6, 2018 |
0 Comments
1184
This post was written by : Risha
DSC_3015

வட கொரியா தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இலங்கை மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவ செயற்பாட்டு விருந்துபசார நிகழ்வின் போதான கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இருநாட்டு அமைச்சர்களும் முதலீடு, வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, விவசாயம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, உள்ளடங்கலான பரஸ்பர நலன் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதேவேளை, 2018 ஜனவரி 8 தொடக்கம் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜப்பான் – இலங்கை நாடாளுமன்ற நட்புறவு லீக்கைச் சேர்ந்த உறுப்பினர்களின் உத்தேசிக்கப்பட்ட இலங்கைக்கான விஜயத்தையும், 2018 ஜனவரி 25 தொடக்கம் 26 வரையான காலப்பகுதிக்கான ஜப்பானிய வணிக மற்றும் தொழிற்துறை சங்க குழுவினரின் விஜயத்தையும் இரண்டு அமைச்சர்களும் வரவேற்றனர். அத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகளை ஆழமாக்குவதற்காக அத்தகைய விஜயங்களின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினர்.

ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் நேற்று இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து, ஜப்பானின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன் இலங்கைக்கான அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg