Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீனத்துக்கான உதவித்தொகை நிறுத்தம்: அமெரிக்கா மறுப்பு

In
Published: 04:18 GMT, Jan 6, 2018 |
0 Comments
1173
This post was written by : Suganthini
us

பலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா. முகவரகத்துக்கு வழங்கப்படும் உதவித்தொகையில், 125 அமெரிக்க டொலர் உதவித்தொகையை, அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

இருப்பினும், இதனை மறுத்துள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலகம், பலஸ்தீனத்துக்கான உதவித்தொகையை நிறுத்துவது தொடர்பாக எதுவித முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லையெனவும் கூறியுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான முடிவை இம்மாத நடுப்பகுதியில்  எடுக்க  தாம் தீர்மானித்துள்ளதாகவும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

இஸ்ரேலுடன் நிலையான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனம் ஒத்துழைக்காவிடின், அந்நாட்டுக்கு மில்லியன்கணக்கில் வழங்கப்படும் உதவித்தொகையை எதிர்காலத்தில் நிறுத்தும் சாத்தியம் காணப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.

ஐ.நா. முகவரகத்துக்கு அதிகளவான நன்கொடையை அமெரிக்கா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg