Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு- கிழக்கிற்கிற்கான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்: ஒஸ்டின் பெர்னாண்டோ

In இலங்கை
Updated: 04:22 GMT, Jan 6, 2018 | Published: 04:22 GMT, Jan 6, 2018 |
0 Comments
1171
This post was written by : Risha

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நன்மை அடையும் வகையில் தொடர்ந்தும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மொரகஹகந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது தெரிவித்த அவர், ”ஜனாதிபதியின் மொரகஹகந்த அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மகாவலி திட்டத்தைப் பார்க்கிலும் விரிவான திட்டமாகவும் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வலுசேர்க்கக்கூடிய திட்டமாகவும் மொரகஹகந்த திட்டம் அமைந்துள்ளது.

வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள ரஜரட்ட அப்பாவி விவசாய சமூகத்தினருக்காக கௌரவ மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட அர்ப்பணிப்பினதும் விடாமுயற்சியினதும் பெறுபேறே மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டமாகும் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg