Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கூட்டமைப்பே பொறுப்பு!

In இலங்கை
Updated: 05:33 GMT, Jan 6, 2018 | Published: 05:32 GMT, Jan 6, 2018 |
0 Comments
1329
This post was written by : Risha

யுத்தத்தின்போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பொறுப்புகூற வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசக் கிளைக் காரியாலயத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) பட்டிருப்பில் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்த காலத்தில் இளைஞர்களை போர்க்களத்திற்கு அதிகளவு அனுப்பியது இந்த பட்டிருப்பு பிரதேசமாகும். இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து உயிரிழந்த அனைத்து போராளிகளுக்கும், பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது.

தமிழர்களின் கையிலிருந்த கிழக்கு மாகாண நிர்வாகத்தை தமிழர்களின் கையில் இருக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.

தமிழர்களின் பிரதேசங்களுக்கு வந்த அபிவிருத்திகள் அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன, இன்றுவரை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் ஆசிரியர்களின் தட்டுப்பாடு, மயானப்பிரச்சினை, மைதானப்பிரச்சினை, வடிகானில்லாப் பிரச்சினை, என அனைத்தும் தலைதூக்கி நிற்கின்ற இந்நிலையில் வந்த நிதிகளெல்லாம் வேறு பிரதேசங்களுக்கு கொடுக்கப்பட்டன.

தமிழர்களின் நிர்வாகங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பறிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களில் கிழக்கிலுள்ள தமிழர்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையிலிருந்து தமிழர்கள் விடுபடவேண்டுமாக இருந்தால், அடிப்படையிலிருக்கின்ற உள்ளுராட்சி மன்றத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மக்கள் தங்களது ஆணையை வழங்க வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg