Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்டவுனின் தடுமாறும் இந்திய அணி- முதல்நாளில் 3 விக்கெட் இழப்பு

In கிாிக்கட்
Updated: 05:08 GMT, Jan 6, 2018 | Published: 05:07 GMT, Jan 6, 2018 |
0 Comments
1330
This post was written by : Elakkiya

தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆட்டநேர நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய அணியின் சார்பில் புஜாரா மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர்.

கேப்டவுனில் நடைபெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 73.1 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தென் ஆபிரிக்க அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில், டிவில்லியர்ஸ் 65 ஓட்டங்களையும் டு பிளஸிஸ் 62 ஓட்டங்களைஞம் குவிண்டன் டி கொக் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg