Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய மைல்கல்லை எட்டினார் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார்

In கிாிக்கட்
Updated: 05:44 GMT, Jan 6, 2018 | Published: 05:42 GMT, Jan 6, 2018 |
0 Comments
1807
This post was written by : Elakkiya
201801060844540140_Bhuvneshwar-Kumar-record_SECVPF

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சாதனை படைத்துள்ளார்.

தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) கேப்டவுனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸிஸ் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இவற்றில் தென் ஆபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான எல்கர், மார்க்ரம் மற்றும் அம்லா ஆகியோரை முதல் மூன்று ஓவர்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்திருந்தார். எல்கரை முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்திய துணைக் கண்டத்துக்கு வெளியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்துவது என்பது கடந்த 1992 ஆம் ஆண்டின் பின்னர் இதுவே முதன்முறையாகும்.

அதேவேளை கடந்த 2001 ஆம் ஆண்டின் பின்னர் வெளிநாட்டு டெஸ்ட்டில் பந்து வீச்சாளர் ஒருவர் முதல் மூன்று ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்துவது என்பது இது மூன்றாவது நிகழ்வாகும்.

2005 ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஜேம்ஸ் பிராங்ளினும் 2017 ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவின் கம்மின்ஸூம் இத்தகைய சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg