Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதியில் விலை உயர்வு: அரச அதிகாரிகளுக்கு நட்டஈடு

In உலகம்
Published: 05:33 GMT, Jan 6, 2018 |
0 Comments
1447
This post was written by : Suganthini
savudi

சவுதி அரேபியாவில்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  புதிய விற்பனை வரி மற்றும் எரிபொருள் விலை உயர்வையிட்டு,   அரசாங்க அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், அடுத்த வருடத்திலிருந்து சுமார் 260 டொலரை மாதாந்தம் வழங்க சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்,

உள்ளூர் பெற்றோல் விலையை சவுதி அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியதுடன், உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீத வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், எண்ணெய் சார்ந்துள்ள நிலையைக் குறைக்க சவுதி அரசாங்கம் விரும்புகின்றது. இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியமும் 5 சதவீத விற்பனை வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தனியார் சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளைப் பயன்படுத்தும் குடிமக்களுக்கு விலக்களிக்கப்படுமென்பதுடன், முதன்முறையாக வீடுகளைக் கொள்வனவு செய்பவர்களுக்கு அதற்கான வரியை அரசாங்கமே செலுத்துமெனவும்,  சவுதி அரச ஆணையகம் கூறியுள்ளது.

எண்ணெய் தவிர தங்களது வருமான ஆதாரங்களை வளைகுடா நாடுகள் பல்வகைப்படுத்த வேண்டுமெனச் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நீண்டகாலமாகக் கோரி வருகின்றன.

சவுதியில் 90சதவீதத்துக்கும் அதிகமான வருவாய் எண்ணெய்த் தொழிலிலிருந்து கிடைக்கின்றது. இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியத்தில் அவ்வருவாயானது, 80 சதவீதமாகக் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg