Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்மீக அரசியல் என்பது பித்தலாட்டம்: ரஜினி மீது வீரமணி தாக்கு

In இந்தியா
Published: 05:57 GMT, Jan 6, 2018 |
0 Comments
1126
This post was written by : Varothayan
Keeramani

தமிழகத்தில் ஆன்மீக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது பித்தலாட்டம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

நாத்திகம் தொடர்பான புத்தக வெளியீட்டு மாநாடு திருச்சி பெரியார் மணியம்மை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியார்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயத்தைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய கி.வீரமணி, ‘பெரியார் கற்பித்த கடவுளை மற, மனிதனை நினை என்ற வாசகத்துக்கு உலகம் முழுவதும் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. மதம் மக்களை பிரிக்கிறது.

ஆனால் இணைப்புகளை உருவாக்குவது நாத்திகமும், பகுத்தறிவும் தான். தமிழகத்தில் ஆன்மீக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். ஆத்மா, ஆன்மீகம் என்பது பித்தலாட்டம். இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்கிறார்கள்.

உணர்வுகளை உருவாக்கும் ஆத்மா, கூடு விட்டு, கூடு பாயுமாம் என்பது போல் பலர் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். எனவே ஆன்மீக அரசியல் என்பது பித்தலாட்டம்’ என்று கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றிய லண்டன் தலைமை செயல் அதிகாரி கேரே மெக்கலாண்ட் உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)