Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணையும் வாய்ப்பில்லை: மக்ரோன்

In ஐரோப்பா
Published: 06:02 GMT, Jan 6, 2018 |
0 Comments
1064
This post was written by : Suganthini
france

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணையும் வாய்ப்பில்லையென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸுக்கு விஜயம் செய்துள்ள துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், பிரான்ஸ் ஜனாதிபதியை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர், பரிஸில் இவர்கள் இருவரும் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், துருக்கி தொடர்;ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றது. இருப்பினும், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கான வாய்ப்பில்லை’ என்றார்.

இதேவேளை, ‘கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg