Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய – இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

In இந்தியா
Updated: 06:11 GMT, Jan 6, 2018 | Published: 06:11 GMT, Jan 6, 2018 |
0 Comments
1187
This post was written by : Varothayan

இந்தோனேசியாவிற்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ், நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ரெட்னோ மர்சுடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 3 நாடுகளுக்கான விஜயத்தினை கடந்த 4ஆம் திகதி ஆரம்பித்த சுஷ்மா, சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று தாய்லாந்து சென்று, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் டொன் பிரமுத்வினை சந்தித்து பேசினார்.

அப்போது, தாய்லாந்துடனான பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு சுஷ்மா சுவராஜ், நேற்று இந்தோனேசியா சென்றடைந்தார். அவரை இந்திய தூதரக அதிகாரிகளும், அந்நாட்டு அதிகாரிகளும் உற்சாகமாக வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, இந்தோனேசியாவில் நடைபெற்ற இந்தியா – இந்தோனேசியா கூட்டமைப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின்னர், இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேசினார்.

சுற்றுப்பயணத்தின் நிறைவாக சிங்கப்பூர் செல்லும் சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து, குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg