Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவால்களை முறியடித்து சுற்றுலா பயணிகளின் வருகையில் சாதனை

In இலங்கை
Updated: 07:43 GMT, Jan 6, 2018 | Published: 06:32 GMT, Jan 6, 2018 |
0 Comments
1192
This post was written by : Risha

சவால் மிகுந்த 2017ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இலங்கை சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு அதிகூடிய எண்ணிக்கையாக இலங்கைக்கு 2.1 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது 2 மில்லியனை தாண்டியுள்ளமையானது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல்வரை இலங்கையின் பிரதான விமான நிலையம் பகுதியளவு மூடப்பட்டதால், விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன.

விமான நிலையம் மீளத்திறக்கப்பட்டதை தொடர்ந்து தெற்கை அடை மழை வாட்டியது. இதனால் சுற்றுலா தலங்களுக்கான பாதைகள் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து டெங்கு பரவல் என பல்வேறு சவால்களை இலங்கை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg