Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருப்பதி கோவிலின் வருமானம் 2017 இல் வீழ்ச்சி?

In
Updated: 07:08 GMT, Jan 6, 2018 | Published: 07:08 GMT, Jan 6, 2018 |
0 Comments
1273
This post was written by : Varothayan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2017 ஆம் ஆண்டு உண்டியல் மூலம் 995.89 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஆலய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இதன்போது, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை இணையம் மூலமாக விலைகோரி ஏலம் விடுதல் போன்றவற்றால் வருமானம் பெறப்படுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு சுமார் 2.73 கோடி பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் உண்டியலில் 995.89 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், 10.66 கோடி ரூபாய்க்கு லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வசூலாகி இருந்த 1046.28 கோடி ரூபாய் வருமானத்தை விட, 2017 ஆம் ஆண்டில் 50.39 கோடி ரூபாய் குறைவாக வசூலாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg