Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறட்சியால் இலங்கையின் கிராமப்புற பொருளாதாரம் பாதிப்பு!

In இலங்கை
Updated: 07:43 GMT, Jan 6, 2018 | Published: 07:12 GMT, Jan 6, 2018 |
0 Comments
1109
This post was written by : Risha
amantha2

இயற்கை அனர்த்தங்களினால் இலங்கையின் கிராமப்புற பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நான்கு தசாப்தங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மிக மோசமான ஆண்டாக கடந்த 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்கள் நிலத்தை கைவிட்டு வெளியேறி, நகர்புறங்களில் வேலைத்தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தினால் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், கடந்த ஆண்டு வறட்சியின் பிடியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, வறட்சியினால் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தினால் 5 லட்சம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் நெல் அறுவடை குறைவடைந்த அதேவேளை, ஒரு தசாப்தத்தில் பதிவான மிகக் குறைவான அறுவடையாகவும் இது விளங்குகிறது. இது கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 வீதம் குறைவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)