Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மடுவில் புத்தர்சிலை வைக்கும் நடவடிக்கை இல்லை:இராணுவம்

In இலங்கை
Updated: 06:39 GMT, Jan 6, 2018 | Published: 06:39 GMT, Jan 6, 2018 |
0 Comments
1247
This post was written by : Ravivarman

மன்னார், மடு நுழைவாயில் பகுதியில் புத்தர்சிலை வைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என வன்னி இராணுவக் கூட்டுப்படை தள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து வன்னி இராணுவ கூட்டுப்படை தள அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வவுனியா – மன்னார் வீதியில் உள்ள மடு நுழைவாயில் பகுதியில் காணப்படும் அரச மரத்தின் கீழ் இராணுவத்தால் புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்தியினை வெளியிட்டு இருந்தன.

ஆனால், இராணுவத்தால் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான எண்ணம் கூட எம்மிடம் இல்லை என வன்னி இராணுவ கூட்டுப்படைத்தள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg