Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதற்ற சூழ்நிலை: ராணுவத்தினர் யுத்தத்துக்கு தயாராக இருக்கவேண்டும் – சீனா

In
Published: 06:41 GMT, Jan 6, 2018 |
0 Comments
1118
This post was written by : Suganthini
china

ஆசியாவில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துக் காணப்படும் இச்சூழ்நிலையில், யுத்தத்துக்கு ராணுவத்தினர் தயாராக தயாராக இருக்க வேண்டுமென, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வடமாகாணமான ஹெபெயிலுள்ள ராணுவக் கட்டளைத் தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, ‘ஆசியாவில் புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்துக் காணப்படும் இச்சூழ்நிலைக்கு மத்தியில், எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும். எனவே, எமது ராணுவத்தினர் மரணத்தையோ அல்லது துன்பங்களுக்கோ அஞ்சாமல், எவ்வேளையிலும் யுத்தத்துக்குத் தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.

யுத்தத்துக்கு தயாராகும் வகையில் பயிற்சிகளை முன்னெடுக்கவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg