Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லையில் அழிக்கப்படும் பனை வளம்

In இலங்கை
Updated: 07:00 GMT, Jan 6, 2018 | Published: 07:00 GMT, Jan 6, 2018 |
0 Comments
1107
This post was written by : JudeDanish

முல்லைத்தீவு மாவட்டத்தில் பனை வளம் வகை தொகையின்றி அழிக்கப்பட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அபிவிருத்தி மற்றும் வியாபார நோக்கங்களுக்காக எந்தவித அனுமதியும் இன்றி பனை மரங்கள் அண்மைக்காலமாக அழிக்கப்பட்டுவருகின்றது.

பனை வள அழிப்பினால் அதனை நம்பி இருக்கும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் மாவட்டத்தில் பனை வளம் குன்றிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே பனை வளத்தினைப் பாதுகாப்பதற்கு மாவட்ட பனை தென்னை அபிவிருத்தி சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg