Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்: ஜாம்ஷெட்பூர்-மும்பை அணிகள் மோதிய போட்டி சமநிலையில் நிறைவு

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:43 GMT, Jan 6, 2018 | Published: 07:42 GMT, Jan 6, 2018 |
0 Comments
1071
This post was written by : Elakkiya
201801060522470179_ISL-2017-Mumbai-Jamshedpur-match-ended-in-a-draw_SECVPF

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் மற்றும் மும்பை சிற்றி அணிகள் மோதிய நேற்றைய போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 2:2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் தியாகோ சாண்டோஸ் முதல் கோல் அடித்தார். அதன்பின் 44 மற்றும் 45ஆவது நிமிடங்களில் ஜாம்ஷெட்பூர் அணியின் சார்பில் இரு கோல்கள் போடப்பட்டன. அதன்படி முதல்பாதி ஆட்டத்தில் 2:1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவத பாதி ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் தியாகோ சாண்டோஸ் மற்றுமொரு கோல் அடிக்க 2:2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலை அடைந்தது. அதன்பின்னர் இரு அணி வீரர்களும் மேற்கொண்ட கோல் முயற்சிகள் பலனளிக்காது போக போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதன்மூலம் புள்ளிபட்டியலில் 14 புள்ளிகளுடன் மும்பை அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை ஜாம்ஷெட்பூர்; அணி 10 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில் நீடிக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)