Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கலைக்கப்படும்: ரவூப் ஹக்கீம்

In இலங்கை
Published: 07:26 GMT, Jan 6, 2018 |
0 Comments
1125
icon_com
This post was written by : Ravivarman
Hakeem - irakkamam - 099

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலைக்கவுள்ளார் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருதிலிருந்து சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் வெற்றி பெற்றாலும், அவர்கள் சபையில் அமர முடியாது எனவும் ஹக்கீம் கூறினார்.

சாய்ந்தமருது பள்ளிவாசலின் பெயரால், அங்கு போட்டியிடும் சுயேட்சைக் குழுவினருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்படுவதாகவும், அது சட்ட விரோதமானது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதன் போது கூறினார்.

மத ஸ்தலங்கள் அரசியலில் ஈடுபட முடியாது என இங்கு தெரிவித்த ஹக்கீம், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தோண்டிய குழியில், அவர்களே விழுந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)